சமையல் குறிப்புகள்
நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள
Browse through tasty recipes.
Home » » பட்டர் கேக்

பட்டர் கேக்


தேவையான பொருட்கள்
மைதாமாவு – 500 கிராம்
சீனி – 450 கிராம்

முட்டை – 8
பிளம்ஸ் – சிறிதளவு
பட்டர் – 500 கிராம் (உருகியது)
வெனிலா – 4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -4 டீஸ்பூன்
முந்திரிப் பழம் – சிறிதளவு
செய்முறை
முதலில் சீனி, முட்டை ஆகியவற்றை போட்டு கரையும் வரை நன்றாக அடிக்கவேண்டும். ஒரு பாத்திரத்தல் உருக்கிய பட்டர் அடித்த சர்க்கரை முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக பீட்டரினால் இருபது நிமிடங்கள் அடிக்கவும்.
தயாரித்த கலவையுடன் மைதாமாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு பீட்டரினால் அடித்து கலக்கவும். அதனுடன் வெனிலா பிளம்ஸ் முந்திரி பழம் ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
அளவான கேக்தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் இருபது நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். தற்போது பட்டர் கேக் தயார்…!
SHARE

About srifm

0 comments :

Post a Comment