சமையல் குறிப்புகள்
நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள
Browse through tasty recipes.
Home » » வெங்காய பஜ்ஜி

வெங்காய பஜ்ஜி

onion Bajji

தேவையான பொருட்கள்
கடலை மாவு – ¼ கிலோ
அரிசி மாவு – 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 4
மிளகாய் தூள் – 1 கரண்டி
கேசரி பவுடர் – 2 சிட்டிகை
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
எண்ணெய் – ½ லிட்டர்
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை
கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்துவிட்டு வட்டமாக சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயத்தை ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும். பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.
SHARE

About srifm

0 comments :

Post a Comment